Monday, June 3, 2013

கரைசேர்ந்த ஓடுகள்


பரந்து விரிந்து வான்தொடும் கடல்
பொங்கிப் பாய்ந்து தழுவும் அலைகள்

தம் இருப்புச் சொல்லி நொடியில்
துள்ளி முழுகும் மீன்கள்

வானில் பறந்து கூர்ந்த பார்வையில்
துல்லியமாய் மீன் பிடிக்கும் பறவைகள்

அழகாய் அமைதிதரும் நீர் பரப்பு
ஆழமாய் வைத்திருக்கும் செழிப்பு

பல விதமாய் பல வண்ணமாய்
நீர்த் தாவரங்கள் நீர்வாழ் பிராணிகள்

ஆழியின் அளவில்லா செழிப்பை
வாழ்ந்த உயிர்களின் அடையாளத்தை

அலைகளோடு அழகாய்ச் சொல்லும்
கரைசேர்ந்த கண்கவர் ஓடுகள்

22 comments:

  1. ஆஹா..

    //தம் இருப்புச் சொல்லி நொடியில்
    துள்ளி முழுகும் மீன்கள்// - அழகு

    அழகான வரிகளைக் கொண்ட நிறைவான கவிதை கிரேஸ் :)

    ReplyDelete
  2. மனதின் ஆழமும் கடலின் ஆழமும் ஒன்றே மீண்டும் மீண்டு எழும்பும்

    ReplyDelete
  3. ரசிக்க வைக்கும் வரிகள்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. ***தம் இருப்புச் சொல்லி நொடியில்
    துள்ளி முழுகும் மீன்கள்***

    மீன்களோடு விளையாடும் "உயிரோட்டமுள்ள" உங்கள் கவிதை வரிகள்தான் எனக்கு இந்தக்கவிதையிலும் மிகவும் பிடித்த வரிகள்.:-)

    ReplyDelete
  5. ஆழியின் அழகை
    ஆழமாய் மிகரசித்தே
    தோழி நீ எழுதிய கவிச்சித்திரம்
    சூழ என்நினைவு தமிழ்
    ஈழத்திலே மூழ்கியதே
    வாழி நீ!வளர்த்திடு வண்ணக்கவி!

    மிகவே ரசித்தேன்! கவிக்காட்சி மனதை நிறைத்தது.
    வாழ்த்துக்கள்!
    தொடருங்கள்....

    ReplyDelete
  6. "ஆழியின் அளவில்லா செழிப்பை
    வாழ்ந்த உயிர்களின் அடையாளத்தை

    அலைகளோடு அழகாய்ச் சொல்லும்
    கரைசேர்ந்த கண்கவர் ஓடுகள் "

    ஒதுங்கிய கிளிஞ்சல்களும் கவியாகி உயிர்பெற்றனவே.

    ReplyDelete
  7. உண்மைதான். வருகைக்கு நன்றி கவியாழி கண்ணதாசன் அவர்களே.

    ReplyDelete
  8. நன்றி திரு.திண்டுக்கல் தனபாலன்!

    ReplyDelete
  9. @வருண்: மிக்க நன்றி வருண்.
    //மீன்களோடு விளையாடும் "உயிரோட்டமுள்ள" உங்கள் கவிதை வரிகள்தான் எனக்கு இந்தக்கவிதையிலும் மிகவும் பிடித்த வரிகள்.:-)// கவிதையை ரசித்து உயிரோட்டமுள்ள கவிதை வரிகள் என்றும், பிடித்த வரிகளைச் சொன்னதற்கும் மிகவும் நன்றி!

    ReplyDelete
  10. @இளமதி: உங்கள் கவியும் அருமை..வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி இளமதி!

    ReplyDelete
  11. @மாதேவி: நன்றி மாதேவி! ஆமாம் கிளிஞ்சல்கள் உயிரோட்டமாய் மகிழ்ச்சி தந்தன.

    ReplyDelete
  12. அழகான அருமையான வரிகள் கிரேஸ்.. வார்த்தைகளைக் கோர்க்கும் முறையை உன்னிடம் தான் கற்க வேண்டும் :‍))

    ReplyDelete
  13. அழகான கவிதை... கடற்கரையின் அழகை இவ்வளவு அழகாக யாராலும் கூற இயலாது... வாழ்த்துகள்...

    ReplyDelete
  14. முதன் முறை தங்களின் தளத்திற்கு வருகிறேன். கவிதை அருமை. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  15. :) நன்றி தியானா!

    ReplyDelete
  16. @இரவின் புன்னகை: வருகைக்கு முதல் நன்றி. மனம்திறந்த கருத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி!

    ReplyDelete
  17. @கரந்தை ஜெயக்குமார்: வருகைக்கு நன்றி! கவிதை படித்து பாராட்டி வாழ்த்தியமைக்கு மிகவும் நன்றி!

    ReplyDelete
  18. மிக்க அழகான கவிதை. படித்து ரஸித்தேன் அன்புடன்

    ReplyDelete
  19. கடற்கரையில் நின்று அலையையும் காற்றையும் அனுபவித்த சுகம் - தங்கள் கவிதையில் கிடைத்தது.

    ReplyDelete
  20. @காமாட்சி: வருகைக்கும் அன்பான கருத்துக்கும் மிகவும் நன்றி!

    ReplyDelete
  21. @சிவகுமாரன்: உங்கள் கருத்துரை கண்டு மிகவும் மகிழ்ந்தேன். வருகைக்கும் மனம்திறந்த கருத்துக்கும் நன்றி பல.

    ReplyDelete

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...