நம் வீட்டு ராசா, அடுத்த வீட்டு ராசாத்தி

இடம் ஒன்று, காட்சி ஒன்று:
"எனக்குப் பொண்ணு பிறந்திருக்கா, இனிப்பு எடுத்துக்கோங்க"
இனிப்புக் கொடுத்து மகள் பிறந்ததைக் கொண்டாடும் பெற்றோர்!

இடம் இரண்டு, காட்சி ஒன்று :
"எனக்கு மகன் பிறந்துருக்கான், இனிப்பு எடுத்துக்கோங்க"
மகன் வரவைக் கொண்டாடும் பெற்றோர்.

இடம் ஒன்று, காட்சி இரண்டு:
"எப்படி நன்றாகப் பேசுகிறாள் பார், என் ராசாத்தி!"
...
"நடை பயிலத் துவங்கிவிட்டாளா,, என்ன அழகு!"
...
"நல்ல பள்ளியில்  சேர்த்து விட்டேன், படிப்பு தானே எல்லாம்..எப்படி வரப்போறா பாரு என் தங்கம்"
....

இடம் இரண்டு, காட்சி இரண்டு:"சிங்கக்குட்டி எப்படி நடக்கிறான் பாரு"
...
...
"எவ்வளவு அழகாப் பேசுறான்"
...
...
"நல்ல பள்ளியில் சேர்த்துட்டேன்..நல்லாப் படிக்கிறான் என் ராசா!"
....

இடம் ஒன்று, காட்சி மூன்று:
"ஆடல் அரங்கேற்றம், கண்டிப்பா வந்து பாருங்க"
....
"நல்ல மதிப்பெண் வாங்கி பொறியியல் கல்லூரியில் சேர்ந்துட்டா"
...
"கன்னக் குழியப் பாருங்க, எவ்ளோ அழகா இருக்கா..என் மகன் இவளுக்கு மூப்பா இருந்தா நானே எடுத்துருப்பேன்.." - நண்பர் ஒருவர்.
....
"திறமையும் அழகும் கொண்ட பெண், யார் குடுத்து வச்சுருக்காரோ " - இன்னொரு நண்பர்.

இடம் இரண்டு, காட்சி மூன்று:
"ஆமாம்பா, பொறியியல் கல்லூரியில் சேர்ந்துட்டான். நல்ல மதிப்பெண்"
...
"எப்படி அசத்தலா இருக்கான் பாரு..மகராசி எங்க இருக்காளோ?" - பாட்டி ஒருத்தி.
...
"டென்னிஸ் நல்ல விளையாடுவான், பாடினா கேட்டுட்டே இருக்கலாம்"
..

இடம் ஒன்று, காட்சி நான்கு :
"நல்ல வேலையில் சேர்ந்துட்டா ..சந்தோசமா இருக்கு"
...
"ஆமாம்பா, வரன் பாத்துட்டு இருக்கேன்"
...

இடம் இரண்டு, காட்சி நான்கு :
"நல்ல கம்பெனி, நல்ல ஊதியம்"
...
"நல்ல பெண் இருந்தா சொல்லுங்க"
...

இடம் இரண்டு, காட்சி ஐந்து :
"நல்ல அழகான திறமையான பொண்ணு..இடம் ஒன்றில இருக்கா..பாக்கலாமா" - தெரிந்த நபர் 
....
"எவ்வளவு செய்வாங்க..ராசா மாதிரி வளர்த்தேன்..அருமையான பையன் , நல்ல வேலை..கேட்டுச் சொல்லுங்க"
....

இடம் ஒன்று, காட்சி ஐந்து:
"ராசா மாதிரி பையன், படிப்பு, வேலை எல்லாம் அருமை...
எவ்வளவு செய்வீங்கன்னு சொன்னா.."
...
...
இப்படிக் காட்சிகள் பல..

முந்தையக் காட்சிகள் ஒன்றுபோல இருக்க, கல்யாணக் காட்சி மாறுபட வேண்டுமா? அடுத்த வீட்டு ராசாத்தி நம் வீட்டு வேலைக்காரியா? நம் பையன் ராசா என்றால், ராசாத்தியாய் வளர்ந்த அடுத்த வீட்டுப்  பெண் மட்டும் எப்பொழுது தரம் குறைந்து போகிறாள்? சிந்திக்க வேண்டாமா?...எங்கு வருகிறது இந்த மாற்றம்? வரதட்சினை என்று ஒரு பெயர் வேறு...வரதட்சினை வேண்டாம் என்று சொல்ல வேண்டுமா? அந்த வார்த்தையே வேண்டாம் அல்லவா? ......

20 கருத்துகள்:

  1. அருமை.. ஆணி அடிச்ச மாதிரி நச்சுனு சொல்லி இருக்கீங்க கிரேஸ். சொல்லிய விதமும் அழகு . வித்தியாசமான பதிவு. தொடருங்கள் :)

    பதிலளிநீக்கு
  2. இறுதியில் இப்படித்தான் செய்வார்கள்.மனமே இல்லாத மானிடர்கள்

    பதிலளிநீக்கு
  3. சரியாகச் சொன்னீர்கள்... இந்த வியாபாரம் தேவை இல்லை...

    பதிலளிநீக்கு
  4. இப்போதைய இளையவர்கள் இதற்கெல்லாம் இடம் வைக்காது காரியங்களை முடிக்கின்றனர்.
    நல்ல பதிவு.
    இனிய நல்வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  5. @கவியாழி: //இறுதியில் இப்படித்தான் செய்வார்கள்.மனமே இல்லாத மானிடர்கள்//ஆமாம் ஐயா, சரியாகச் சொன்னீர்கள்..என்று மாறுவார்களோ ...

    பதிலளிநீக்கு
  6. @திண்டுக்கல் தனபாலன்: // இந்த வியாபாரம் தேவை இல்லை...// ஆமாம், கண்டிப்பாகத் தேவையில்லை..நன்றி.

    பதிலளிநீக்கு
  7. @கோவைக்கவி: //இப்போதைய இளையவர்கள் இதற்கெல்லாம் இடம் வைக்காது காரியங்களை முடிக்கின்றனர்.// ஆமாம், சிலர் இப்படிச் செய்கின்றனர்..அனைவரும் மாறினால் நல்லது..வருகைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  8. வணக்கம் கிரேஸ்!

    என்னோட முதல் வரவு! அருமையான பதிவொன்றைப் படித்த திருப்தி - நிச்சயமாக நீங்கள் சொல்வது சரி! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  9. @மாட்ஜியோஜ்ஜி மனீ மனீ: வருக வருக மனீ! வருகைக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி!

    பதிலளிநீக்கு
  10. அருமை அருமை! ஒத்த வரியில சொல்லணும்னா

    கிரேஸ்-ன்னா கிரேட் தான்!...

    வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  11. @இளமதி: மிக்க நன்றி தோழி :) வாழ்த்துக்கும் தொடர் ஊக்கத்திற்கும் நன்றி பல!

    பதிலளிநீக்கு
  12. இப்பொழுதே ஐம்பது சதவிகித மக்கள் மாறி விட்டார்கள்.. அனைவரும் இன்னும் இரு தலைமுறையில் மாறிவிடுவார்கள் என்று நினைக்கிறேன்..

    பதிலளிநீக்கு
  13. @தியானா: 50% மாறிவிட்டார்களா என்று தெரியவில்லை..ஆனால் மாறிக்கொண்டிருக்கிறது..நம்பிக்கை வைப்போம் தோழி.. :)

    பதிலளிநீக்கு
  14. @கரந்தை ஜெயக்குமார்: வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  15. அன்பின் கிரேஸ் - இன்றைய வலைச்சர அறிமுகம் மூலமாக இங்கு வந்தேன் - இங்கும் அங்கும் இறுதியில் வேறுபடும் சிந்தனைகள் - அல்ல அல்ல காலம் செய்யும் கோலம் - என்னவென்று சொல்வது ....... இச்சிதனை மாறவே மாறாது - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் தள அறிமுகத்தினை அறிவித்துக் கருத்தும் இட்டதற்கு மிகவும் நன்றி!
      //இச்சிதனை மாறவே மாறாது// அப்படிச் சொல்லாதீர்கள் ஐயா, மாறவேண்டும் என்று வாழ்த்துங்கள்! :)

      நீக்கு
  16. i would have been accepted this 3 years back....But not now.
    You might be saying this with an open mind. But the world is not like that..
    I don't support dowri..But the right dowry would help to identify the similar status of family like yours.
    i can write lot on this.. But this cannot be explained over blogs.
    Just give a thought. Don't simply believe that dowry is not required

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...