அவள் அன்புக்கு முன்...


அம்மா 
அவள்தான் கருவில் சுமந்தாள்
சுமையென்று நொடிகூட நினைக்காமல்

அம்மா
அவள்தான் உதிரம் கொடுத்து வளர்த்தாள்
உபயோகம் ஒன்றும் உத்தேசிக்காமல்

அம்மா
அவள் தான் பல தியாகம் செய்து தாங்கினாள்
தன்னலம் முன்னே  நிறுத்தாமல்

அம்மா
அவள் தான் நாளும் அன்புடன் பணிபல செய்வாள் 
நன்றி ஒன்றும் எதிர்பாராமல்

அம்மா
அவள் தான் வளர்ந்தபின்னும் சீராட்டுகிறாள்  
தனக்கு சிறப்பு நினைக்காமல்

அம்மா
அவள் தான் எப்பொழுதும் பிள்ளைகளுக்காகவே வாழ்கிறாள்
முகம் சுழிக்காமல்

அம்மா 
அவள்தான் நோயென்றால் கண்விழித்துக் கவனிப்பாள் 
தன் வலி ஏதும் சொல்லாமல் 

அம்மா
அவளைத் தான் லேசாக எடுத்துக் கொள்கிறோம் 
நாளும் நச்சரிக்கிறோம் 

அவள் செய்வதெல்லாம் கணக்கு இல்லாதவை 
அவள் செய்வதெல்லாம் ஈடு இல்லாதவை 
அவளுக்கு 
அன்னையர் தின வாழ்த்துச் சொல்வதும் மிகச் சிறிதே 

அளவிட முடியாத அவள் அன்புக்கு முன் 
நன்றியில் அடைக்க முடியாத அவள் அன்புக்கு முன் 
வணங்குகிறேன் நேசிக்கிறேன் 
அவள் அன்புக்கு முன் 
என்ன செய்தாலும் நிகராகாது அன்றோ?

இக்கவிதை என் அம்மாவிற்கு...அவளுடைய கடல் போன்ற அன்பிற்கு ஒரு துளி போல..




24 கருத்துகள்:

  1. அன்னையின் அன்பினை அனைவரும் பெற்றிட்ட
    எல்லோரும் இன்றும் நன்றியை இவர்போல் தெரிவிப்போம்,வாழ்த்துக்கள் கிரேஸ்.

    பதிலளிநீக்கு
  2. ஆஹா.. அற்பதம் ஒவ்வொரு வரியும் உண்மை. அழகாக சொல்லி இருக்கீங்க கிரேஸ்.

    தங்களுக்கு இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள் :)

    பதிலளிநீக்கு
  3. மிக்க நன்றி கவியாழி கண்ணதாசன் அவர்களே!

    பதிலளிநீக்கு
  4. கருத்துரைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஸ்ரீனி.

    பதிலளிநீக்கு
  5. எதுவுமே நிகரில்லை... அற்புத வரிகள்...

    அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  6. அம்மாவின் புகழை
    அகிலமும் கேட்கும்படி உங்களது
    இயல்பான கவிதை
    இசையுடன் என் மனதை அசைக்க‌
    அகமகிழ்ந்து இங்கே பாடுகிறேன்.

    கேட்கவும்.


    சுப்பு தாத்தா.
    www.vazhvuneri.blogspot.com

    பதிலளிநீக்கு
  7. அன்னையின் கடல் போன்ற அன்பிற்கு ஒரு துளி போல..

    இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  8. பெயரில்லா12 மே, 2013 அன்று AM 3:54

    இனிய அன்னையர் தின வாழ்த்து.
    Vetha.Elangthilakam

    பதிலளிநீக்கு
  9. அவள் அன்புக்கு முன்
    என்ன செய்தாலும் நிகராகாது அன்றோ?//
    உண்மை.

    அம்மாவின் கடல் போன்ற அன்புக்கு கவிதை.
    மிக அருமை கவிதை. சூரி சார் உங்கள் கவிதையை பாட்டாய் பாடி விட்டார்., கேட்டு மகிழ்ந்தேன்.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  10. கண்களில் ஈரம் கசிய வைத்துவிட்ட அம்மாவின் நினைவுகள் . வாழ்த்துக்கள் சகோதரி .

    பதிலளிநீக்கு
  11. ஒவ்வொரு வரியும் உண்மை கிரேஸ்.. அம்மாவின் பெருமையைச் சொல்லும் அழகான கவிதை.. அன்னையர் தின வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  12. @திண்டுக்கல் தனபாலன்: நன்றி!
    வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  13. @சுப்பு தாத்தா: மிக்க நன்றி. என் கவிதையைப் பாடியதற்கும் நன்றி பல.கேட்டு நெகிழ்ந்தேன். நன்றி நன்றி!

    பதிலளிநீக்கு
  14. @இராஜராஜேஸ்வரி: மிக்க நன்றி!
    உங்களுக்கும் அன்பான அன்னையர் தின வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  15. @கவிதை வீதி சௌந்தர்: வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  16. @கோவைக்கவி: மிக்க நன்றி. உங்களுக்கும் அன்பான அன்னையர் தின வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  17. @கோமதி அரசு: வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி. ஆமாம் சுப்பு தாத்தாவின் குரலில் கவிதையைக் கேட்டேன். மனம் நெகிழ்ந்தது.
    உங்களுக்கும் அன்பான அன்னையர் தின வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  18. @விமல்: கருத்துரைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சகோதரரே!

    பதிலளிநீக்கு
  19. @தியானா: ஆமாம், மிக்க நன்றி.
    உனக்கும் அன்பான அன்னையர் தின வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  20. "அம்மா
    அவள் தான் வளர்ந்தபின்னும் சீராட்டுகிறாள்
    தனக்கு சிறப்பு நினைக்காமல்"

    அருமையான வரிகள் தோழி . வாழ்த்துகள் !!! தங்களுக்கு என் அன்பான அன்னையர் தின வாழ்த்துகள் !!!

    பதிலளிநீக்கு
  21. @தமிழ்முகில் பிரகாசம்: நன்றி தோழி! வாழ்த்துக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு
  22. ஆமாம் எதுவும் நிகராகாது அம்மாவின் அன்பிற்கு முன்னால். எல்லைகளற்று, முடிவிலி போல பரந்திருக்கும் ஆகாயத்தை விடவும் பெரியது அம்மாவின் அன்பு. அருமையான வரிகள்..

    பதிலளிநீக்கு
  23. @ராபர்ட்: ஆமாம் நீங்கள் சொல்வது உண்மைதான். வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...