Friday, April 12, 2013

தேநீர் குடிக்கலாம் வாங்க...


"வாங்க தேநீர் சாப்பிடலாம்" இது 1950களுக்கு அப்புறம் தான் மிகப் பிரபலம் ஆனதாகப் படித்தேன். அதற்கு முன்னர் மருத்துவ பலன்களுக்காக தேநீர் பயன்படுத்தப்பட்டது போல. அதிலும் பல வகை மூலிகைச் செடிகள் பயன்படுத்தப்பட்டன - அதுதான் கஷாயமோ? ஆங்கிலேயர் வருகைக்குப் பின் தேனீர் தோட்டங்கள் அதிகமாக்கப்பட்டன. இன்று தேயிலை என்று சொல்லப்படும் செடிகள் பிரபலமானது ஆங்கிலேயரால். இந்தியத் தேநீர் வாரியம் 1950ல் ஏற்படுத்தப்பட்டு தேநீர் விளம்பரம் ஆரம்பித்ததாம். இந்தியாவில் விளைவிக்கப்படும் தேயிலையில் 70% இந்தியாவிலேயே நுகரப்படுகிரதாம்.
ஆமாம் அதிலென்ன அதிசயம் இருக்கப் போகிறது..

இரு நண்பர்கள் சந்தித்தால் தேநீர்
தேநீர் வேண்டுமென்றால் நண்பர்கள் சந்திப்பு;

வேலை அதிகமா? களைப்பு  நீங்க தேநீர்!
வேலை இல்லையா? பொழுது போக தேநீர்!

படிக்க வேண்டுமா? தேநீர்!
படம் பார்க்க வேண்டுமா? தேநீர்!

விழித்திருக்க வேண்டுமா? தேநீர்!
உறக்கம் வரவில்லையா? தேநீர்!

காலை 6 அல்லது 7 மணியா? தேநீர்!
மாலை 4 அல்லது 5 மணியா? தேநீர்!

சிந்திக்க வேண்டுமா? தேநீர்!
சிரிக்க வேண்டுமா? தேநீர்!

கோபம் தணிக்க தேநீர்!
உபசரிக்க வேண்டுமா? தேநீர்!

....

அட போதும், நிறுத்திக் கொள்கிறேன், பட்டியல் நீளமாகப் போகிறது!
உணவு இல்லாவிட்டாலும் பரவாயில்லை போல, தேநீர் இல்லாமலா? இப்படி இருந்தால் விளையும் தேநீரில் 70% என்ன 100% நாமே குடித்துவிடலாம். ஆனால் எனக்கு ஒரு விசயம் புரியவில்லை. நம்ம ஊரில் தேநீர் அறிமுகப்படுத்திவிட்டு இன்று உலகமெல்லாம் பல வித ருசிகளில் தேநீர்! எலுமிச்சை தேநீர், இஞ்சி தேநீர் என்று.  இஞ்சி தேநீர் எப்படி செய்ய வேண்டுமாம் என்று கேட்டால், நறுக்கிய இஞ்சித் துண்டுகளை  நீரில் போட்டுக் கொதிக்கவைத்து பின்னர் தேன் சேர்த்து குடிக்கவாம்!! அட அது நம்ம கஷாயம் இல்லிங்களா?
சரி, எலுமிச்சைத் தேநீர் எப்படிங்க செய்றதுனு கேட்டால், தண்ணீரைக் கொதிக்கவைத்து எலுமிச்சை சாறு சேர்த்து தேனும் கலந்து குடிக்கவாம்!!
ஆனால் நம்ம ஊருல எல்லாத்துக்கும் தேயிலையை நீரில் போட்டு கொதிக்கவைத்து எழுமிச்சையோ, இஞ்சியோ, தேனோ சேர்த்து பாலும் சேர்த்து..எனக்கு ஒரே குழப்பம் போங்க...அதோட தேநீர் ஆராய்ச்சிய விட்டுடலாம்..

ஆமாம், நம்ம காளமேகப் புலவரு பாடின மோரு என்னங்க ஆச்சு? வந்தவனுக்கு மோரக் குடுத்துப் பழக்காம, அவன் கொண்டுவந்தத நல்லாப் பழகிக்கிட்டோமே! சரிங்க, ரொம்ப யோசிச்சு...

தேநீர் சாப்பிடலாம் வாங்க! :)

14 comments:

 1. வரேன் வரேன் :).

  தேநீர் மீது திடீர் காதலோ.. ஒரே தேநீர் மயமா இருக்கு :)

  //வந்தவனுக்கு மோரக் குடுத்துப் பழக்காம, அவன் கொண்டுவந்தத நல்லாப் பழகிக்கிட்டோமே!// செம பஞ்ச் போங்க :-)

  ReplyDelete
  Replies
  1. அப்படி எல்லாம் இல்லை ஸ்ரீனி :)
   எழுத எழுத தானா வந்துருச்சு...

   Delete
 2. Jasmine tea என்று ஒரு கடையில் பார்த்து நம் வழக்கமான டீயின் ருசியை எதிர்பார்த்து குடித்தேன். ம்ஹூம்... ருசி பழகாதவரைக்கும் ஏமாற்றம்தான். இப்போது பரவலாய் பச்சைத்தேயிலையின் அறிமுகம் எங்கும். உடலுக்கு பலவித நன்மைகள் தரும் அதன் ருசி பழகுவதற்குள் நாவுக்கும் மனத்துக்கும் பெரும் போராட்டம்தான். நம் நாட்டின் தட்பவெப்பத்துக்கு மோர்தான் நல்லது என்றாலும் பழக்கதோஷம் யாரை விட்டது? மோரையும் குடித்துவிட்டு தேநீரையும் தேடும் மனம்.

  நன்றி கிரேஸ்.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் பச்சை தேநீர் நல்லது..நான் ரோஸ் தேநீர், மாதுளை தேநீர் கூட ருசிபார்த்து விட்டேன்...
   எல்லாம் குடித்துவிட்டு புதினா அரைத்துக் கலந்த மோர் தான் அமிர்தம் போங்க:)

   வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க...

   Delete
 3. உடனே இப்போ உடனே தேநீர் சாப்பிட்ட வேண்டும்... ஹிஹி...

  எதுவும் அதிகம் - ஆபத்து...

  அடிக்கிற வெயிலுக்கு மோர் தான் உடலுக்கு நல்லது...

  ReplyDelete
  Replies
  1. ஹாஹா தேநீர் குடித்து விட்டீர்களா? ஆமாம் வெயிலுக்கு மோர் தான் ஏற்றது.
   வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு.திண்டுக்கல் தனபாலன்!

   Delete
 4. வெயிலுக்கு ஜஸ் ரீ குடிக்க வருகின்றோம் :)

  ரீபற்றி நல்ல தகவல்கள்.

  எங்க வீட்டு ரீ குடிக்க விரும்பினால் வாங்க http://sinnutasty.blogspot.com/2011/01/blog-post.html

  ReplyDelete
  Replies
  1. வாங்க வாங்க, கண்டிப்பாக ஐஸ் ரீ குடித்துக் கொண்டே உரையாடலாம்!
   உங்கள் ரீ குடித்துவிட்டு வந்தேன், நல்ல சுவை! :)
   வருகைக்கு நன்றி!

   Delete
 5. தேநீர் பற்றிய பதிவு மிக நன்று.
  இனிய வாழ்த்து.
  (இதே மாதிரியான எனது ஓரு பதிவு பார்க்க!)
  வேதா. இலங்காதிலகம்
  http://kovaikkavi.wordpress.com/2011/10/15/11-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%95%e0%af%88/

  ReplyDelete
  Replies
  1. நன்றி கோவைக்கவி அவர்களே!
   உங்கள் தேநீர் பாவை ரசித்துவிட்டு வந்தேன்..அருமை!

   Delete
 6. என்ன இன்று தேநீரைப்பற்றி அலசலோ?..:)

  நல்லது. எனக்கும் சுறுசுறுப்புக்கும் தலை கிறுகிறுப்புக்கும் தேன் சேர்த்து வெறும் சாயா நேநீர் அவ்வப்போது சிறுதுண்டு இஞ்சி தட்டிப்போட்டு... அதுவே போதும்...:)

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் தோழி இளமதி! :) தொண்டையில் இதமாய் இறங்கிய இஞ்சித் தேநீரும் தோழியுடன் உரையாடிக் கொண்டே சுவைத்த எழுமிச்சைத் தேநீரும் தூண்டியது இந்தப் பதிவை!
   ஆமாம், இஞ்சித் தேநீர் அருமைதான்!

   Delete
 7. நாம் சாதரண வாழ்வில் கடைபிடித்தெல்லாம் இப்போ ஏதோ அதிசய விஷயமா போயிடுசசி மற்றவர் களுக்கு

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், நாம் விட்டுவிட்டு ஓடுகிறோம், அவர்கள் அருமை தெரிந்து வருகிறார்கள்!

   Delete

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...