செம்பருத்தி அவிழ வாராரோ


அழிதுளிச் சிதறி கார் தொடங்கிற்றே 
உதுக்காண் தோழி! முல்லை மலர்ந்ததே!
இவணும் வாரார்! எவணரோ என
எண்ணியே நான் வருந்தியிருக்க 
என் நிலைத் தாங்காத செம்பருத்தியும் 
முகம் கவிய வருந்துவதைப் பார் தோழி!
இச்செம்பருத்தி அவிழ வாராரோ விரைந்தே தோழி!

சொற்களின் பொருள்:
அழிதுளி - பெரும் மழை
கார்  - மழை
உதுக்காண் - இங்கே பார்
இவணும்- இங்கும்
எவணரோ - எங்கு இருக்கிறாரோ
கவிய - கவிழ்ந்து 
அவிழ - மலர 

17 கருத்துகள்:

  1. அழகு.. அப்படியே முல்லைப்பாட்டில் ஒரு பாடல் படித்த மாதிரி இருக்கு. அருமை கிரேஸ். பல புதிய சொற்களையும் தெரிந்து கொண்டேன்.

    பதிலளிநீக்கு
  2. புதிய‌ வார்த்தைக‌ள் கொண்டு அருமையாக‌ க‌வி தொடுக்கிறாய் கிரேஸ்.. வாழ்த்துக‌ள்

    பதிலளிநீக்கு
  3. சொற்களின் பொருள் விளக்கத்திற்கு நன்றி...

    தொடர வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி திரு.திண்டுக்கல் தனபாலன்!

      நீக்கு
  4. அன்புத்தோழி!....
    அழகிய பழந்தமிழ்ச்சொற்களுடன் புனைந்த அருமையான கவிதை! உங்கள் கவித்திறமிகண்டு அகலத்திறந்த கண் மூடமறுக்கின்றதெனக்கு...

    அருந்தமிழ்ச்சொல்லெடுத்து
    அருந்து இது தேனென்று
    விருந்துதரும் உங்களின்
    பெரும் புலமைதனைக்கண்டு
    பொருந்தாதென் வாழ்த்திங்கென
    தருகின்றேன் வணக்கம் கரங்குவித்து...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சொற்கள் தேனென்று இருப்பது
      அருமைத் தமிழின் இனிமை
      தொடுத்தகவி அருமை விருந்தென்று சொல்வது
      இளமதியின் குளுமை
      வாழ்த்திலே பொருந்தா வாழ்த்தென்று உண்டோ?
      கரங்குவித்து உவகையுடன் ஏற்கிறேன்
      உங்கள் வாழ்த்தை, நன்றியுடன்!

      நீக்கு
  5. கார் தொடங்கிற்றே இப்
    பாரும் குளிர்ந்தற்றே.
    பூவும் மலர்ந்தற்றே இப்
    புவியரும் புன்னகைத்தே ..

    அவிழ வாராரோ
    அருகில் வாராரோ
    பருக வாராரோ
    பூ இதழை
    சுவைய வாராரோ !!

    வாழ்த்துக்கள்...



    சுப்பு தாத்தா.
    www.subbuthatha.blogspot.in

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவிதை நன்று! வாழ்த்துக்கு நன்றி சுப்பு தாத்தா அவர்களே!

      நீக்கு
  6. பொருளுடன் கவிதை பழங்காலத்து கவிதை நடையினில் மிகவும் அழகு

    பதிலளிநீக்கு
  7. கவிதை அருமை சகோதரி.வலைச்சரத்தில் எனது வலைப்பதிவை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றிகள் பல..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி சகோதரி தமிழ்முகில் பிரகாசம்! உங்கள் தளம் அறிமுகப்படுத்தியது எனக்கு மகிழ்ச்சியே.

      நீக்கு
  8. அருமையான கவிதை இன்று தான் உங்கள் வலைத்தளம் வந்தேன் அனைத்தும் சிறப்பு தொடர்ந்து வர முயற்சிக்கிறேன் நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் தளத்திற்கு நீங்கள் வந்தது மகிழ்ச்சி! எப்பொழுதும் வரவேற்கிறேன்! கவிதைகளைப் படித்து கருத்து இட்டதிற்கு நன்றி!

      நீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...