நம்மிடையே ஒளிந்திருக்கும் பரங்கியன்

அரசியல் விடுதலை பெற்றோம் 
அகலவில்லை ஆதிக்கம் முழுவதுமாய் 
ஆங்கிலேயன் கொண்டு வந்த எதுவும் 
நமக்குப்  பெரிதாய் ஆகிவிட்டது 
நம்முடன் இருந்த பலவும் 
நமக்குச் சலிப்பாய் ஆகிவிட்டது 
நம்மில் ஒன்றாகி விட்டான் 
நமக்கேத்  தெரியாமல் 
நம்மிடையே ஒளிந்திருக்கும் பரங்கியன்

செம்மொழி நம் அடையாளமாய் இருக்க 
பிற மொழி ஆதிக்கம் எதற்கு 
பல மொழி கற்கலாம்,
இன்றைய வாழ்க்கைக்குத்  தேவைதான் 
ஆனால் தமிழ் நம் அடையாளம் இல்லையா?
தமிழைத் தள்ளிவிட்டுத்  தலை நிமிர முடியுமா?
அறிவோம், தெளிவோம், செயல்படுவோம்!
தமிழ் நம் மூச்சாய் இருக்கட்டும் 
பிறமொழி அணியாய் இருந்துவிட்டுப்  போகட்டும்!

இப்பொழுது ஒளிந்திருக்கும் பரங்கியர்களைப் பாருங்கள்..மாற்ற முயற்சிக்கலாம் வாருங்கள்!

ஓகே - சரி
டைம் - நேரம்,மணி 
டே - நாள், கிழமை 
குட் மார்னிங் - வணக்கம் 
பை பை - அப்புறம் பார்க்கலாம், போயிட்டு வரேன்
ப்ரஷ் பண்ணி - பல் துலக்கி 
பக்கெட் - வாளி 
ப்ளேட் - தட்டு 
காலெண்டர் - நாட்காட்டி
ஸ்க்ரீன் - திரைச்சீலை
தேங்க்ஸ் - நன்றி
புக் - புத்தகம்
கிளாக், வாட்ச்  - கடிகாரம் 
ட்ரை - முயற்சி 
டேபிள்- மேசை 
சேர் - நாற்காலி, முக்காலி (தமிழில்தான் முக்காலியும் நாற்காலியும் உண்டு..ஆங்கிலத்தில் சேர் மட்டும்தான்)
செயின் - சங்கிலி, ஆரம் 
பொக்கே - பூங்கொத்து 
கிட்சன்- அடுக்களை, அட்டில் 
பெல் - அழைப்பு மணி , மணி 
ஒன், டூ,த்ரீ.... - ஒன்று, இரண்டு, மூன்று...

இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே இருக்கிறது... அன்றாடம் பேசுவதைத்  தூய தமிழில் மாற்ற முயற்சி செய்தால் எத்தனைப் பரங்கியர் ஒளிந்துள்ளனர் என்று தெரியும்! 

8 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. நன்றி திரு.திண்டுக்கல் தனபாலன்!
      ஆனால் சற்றுக் கடினமாகத்தான் இருக்கிறது... :)

      நீக்கு
  2. மிகவும் தேவையான பதிவு கிரேஸ். பாமரனிடம் மொழி இருக்கும் வரையில் தான் ஒரு மொழி வாழ முடியும். ஆனால் நம்மை அறியாமலே நம் வழக்கு மொழி மாசு அடைந்து விட்டது. கண்டிப்பாக மாற வேண்டிய நிலையில் உள்ளோம்



    பதிலளிநீக்கு
  3. மாற்ற வேண்டும் என நினைத்தும் மாற்றமுடியாமல் நான் உபயோகிக்கும் வார்த்தைகள்
    Room - அறை
    Colour - நிறம் - வண்ணம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு.சேக்காளி! மாற்ற வேண்டிய சொற்கள் மேலும் இரண்டு சொன்னதற்கு நன்றி. நாம் அனைவருமே ஒரு பட்டியல் வைத்திருக்கிறோம் என்பதே உண்மை..விரைவில் மாறும் என்பதே நம்பிக்கை!

      நீக்கு
  4. யெஸ் கிரேஸ்,நீ சொல்வ‌து க‌ரெக்ட்.. :-))

    க‌டின‌ம் தான். ஆனால் க‌ண்டிப்பாக‌ முயற்சி செய்து பார்க்க‌ வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அழகான கருத்துரை பொருத்தமாய் இட்டிருக்கிறாய் தியானா :)
      ஆமாம், முயற்சி செய்வோம்:)

      நீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...