மண்ணிற்கும் விண்ணிற்கும் காதல்



நெடிது உயர்ந்த தேவதாரு மரங்கள்
விசும்பைத் தொட்டுவிட முயன்று நிற்க
மனம் இளகிய விசும்பு
முகில் முழக்கத்துடன் 
மின்னல் ஒளியுடன்
நானே வருகிறேன் என்று
மழைக் கரங்கள்  நீட்ட
மரங்கள் உதிர்த்த இலைகள்
நிலத்தோடு ஒன்றாகக் கலந்து மக்க
புது மரங்கள் பல செழித்து 
பசுமையாய்த் தொடர்கிறது
மண்ணிற்கும் விண்ணிற்கும் காதல்!


 விசும்பு - வானம்
நான் ஒரு முகாமிற்குச் சென்றபொழுது  அங்கு  காட்டில் மழை பெய்ததால் தோன்றிய கவிதை. - கிரேஸ்

15 கருத்துகள்:

  1. காட்டில் மட்டுமல்ல சினிமாவிலும் மழை பெய்ததால் காதல் கவிதை( அழகான பெண் ) வருமுங்க அது போல உங்கள் காட்டில் மழை பெய்ததால் உங்களிடமிருந்தும் நல்ல கவிதை தோன்றி இருக்கிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், மழை எப்பொழுதுமே காதலுக்கு ஊக்கம் கொடுக்கும் வினையூக்கி தான் :)
      வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி திரு.மதுரை தமிழன்!

      நீக்கு
  2. ஆகா... அருமை...

    இந்தக் காதல் அவ்வப்போது தொடர வேண்டும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி திரு.திண்டுக்கல் தனபாலன்! ஆமாம், இந்தக் காதல் தொடர்ந்தால் தான் எல்லா உயிர்க்கும் நன்மை :)

      நீக்கு
  3. சகோதரரே! அருமை. படைத்திட்ட கவி தந்ததே நல்ல குளிர்மை.
    வாழ்த்துக்கள்!

    மறுப்பேதுமில்லாத
    விருப்போடு இணைந்திட்ட
    சிறப்பான சில்லென்ற காதல்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி இளமதி! கருத்துரையை கவிதையாய் பதியும் உங்கள் திறமையை வியக்கிறேன்!

      நீக்கு
  4. அருமை !! அருமை !!! வாழ்த்துகள் !!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்துரைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி திரு.தமிழ்முகில் பிரகாசம்!

      நீக்கு
  5. அட.. அட.. ரசித்தேன் :-).. படங்களும் அபாரம்

    பதிலளிநீக்கு
  6. Nice poem Grace. Go for more camping and enlighten us with your sweet poems. Sorry for typing in tamil.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி தியானா! பரவாயில்லை..சமியுடன் நீ கருத்துப் பதிவதே பெரிது!

      நீக்கு
  7. இயற்கையை நுனிப்புல் மேய்ந்தேன் நேர நெருக்கடியால். மிக மிக அருமையாக அனைத்தும் எழுதப்பட்டுள்ளது.
    இனிய வாழ்த்து கிரேஸ்.
    வேதா.இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் நேர நெருக்கடியிலும் நான் சொல்லியிருக்கும் இயற்கையை ரசித்து கருத்துரையும் இட்டதற்கு மிக மிக நன்றி வேதா.இலங்காதிலகம் அவர்களே! மகிழ்ச்சி!

      நீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...