காக்கை வென்றதோ கழுகு வென்றதோ?

இளஞ்சூடாய் கதிர்கரம் விரித்து 
மென்மையாய் சூரியன் காதல்பேச 
தணித்து மயங்கிய நிலமகள் மடியிலிருந்து 
நன்றியாய் வானைப் பார்த்த என் கண்கள் 
கண்ட காட்சியை எங்ஙனம் உரைக்க 
மனம் பதைத்த நொடியை எங்ஙனம் சொல்ல 
சிறு மிளகு அன்ன  கண் கொண்ட காக்கை 
வெருண்டு பறக்க யாதோ காரணம்?
பெருஞ் சிறகை விரித்து அச்சுறுத்தி 
அருகாமையில் வந்த கழுகே காரணம்!
காக்கை வென்றதோ கழுகு வென்றதோ...
அரிவை நான் அறியேன் 
இடையே இருந்த கட்டிடம் காரணம்!!

10 கருத்துகள்:

  1. காக்கை, கழுகு - இவை இரண்டும் தோற்கவில்லை.. ஏனென்றால் இவை இரண்டும் ஒரு அழகான கவிதை உருவாக காரணமாகிவிட்டதே :-)



    பதிலளிநீக்கு
  2. கட்டிடம் மறைத்த காரணத்தால்
    காக்கையோ கழுகோவென
    விட்டுமனம் பதைக்க
    மெட்டெடுத்துரைத்தகவி
    மெத்தச் சிறப்பாக இருந்ததுவே
    மலைமுட்ட நிகர்த்த என்வாழ்த்து!

    பதிலளிநீக்கு
  3. கண் முன்னே காட்சிகள் விரிகின்றன... அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியென்றால் கவிதை வென்று விட்டது, மகிழ்ச்சி!
      நன்றி திரு.திண்டுக்கல் தனபாலன்!

      நீக்கு
  4. க‌ழுகு வென்றுயிருந்தாலும் காக‌ம் வென்றுயிருந்தாலும், அங்கு இய‌ற்கையே வென்ற‌து. அருமையான‌ க‌விதை கிரேஸ்..

    பதிலளிநீக்கு
  5. ''..சிறு மிளகு அன்ன கண் கொண்ட காக்கை
    வெருண்டு பறக்க யாதோ காரணம்?..

    வித்தியாச சிந்தனைக் கரு...
    நன்று-
    இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...