மழலை உண்ணும் அழகு

கிண்ணத்தைத் தெளிவாகக் கழுவி 
அதில் பருப்பும் அன்னமும் நெய்யிட்டுக் கலந்து 
பக்குவமாய் உண்ணக் கொடுத்தால் உண்ணாமல் 
கிண்ணத்தைத் தரையில் தட்டி 
அதில் கண்காணா சிறு தூசியெல்லாம் கலந்து 
மனதில் ஒரு குழப்பம் இல்லாமல் 
மூக்கின் மேலிரண்டு கன்னத்தில் நான்கு 
வாயில் ஒன்று என்றுண்ணும் மழலைக்கண்டு உவந்து 
சிலையாய் நின்றாள் தாய் இடையிடாமல்!

16 கருத்துகள்:

  1. குழந்தைகள் செய்யும் அனைத்தும் கவிதையே.. அழகாகப் பதிவு செய்து இருக்கீங்க கிரேஸ் :)

    பதிலளிநீக்கு
  2. ஆகா! சிறுகை அளாவிய கூழ் அழகு.

    பதிலளிநீக்கு
  3. அருமை அன்பரே கொஞ்சம் இதை டிங்கரிங் செய்து எனது தளத்தில் கவிதை உலாவில் வெளியிட்டு உள்ளேன் அன்பரே தள இணைப்போடு ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி பிரேம்! இதை ஒரு அங்கீகாரமாக கருதுகிறேன். மிக்க நன்றி!
      தங்கள் தளத்தில் பார்க்க முடியவில்லை, முடிந்தால் இணைப்பைத் தாருங்கள்.

      நீக்கு
  4. அன்பின் கிரேஸ் - மழலை செய்யும் குறும்புகளை இரசிப்பதே பெற்றவளின் சொர்க்கம் - நல்ல சிந்தனை - நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை,வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சீனா அவர்களே!

      நீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...