எண் எழுத்து இகழேல்

பதுமன் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்துக் கொண்டிருந்தான். சிறிய வாளியில் முகர்ந்த தண்ணீரை அருகிருந்த குடங்களில் ஊற்றிக் கொண்டிருந்தான். குடத்திற்கு இரண்டு ரூபாய் என்று ஊர் மக்கள் தண்ணீர் எடுத்துக் கொடுப்பதற்கு ஊதியமாய் அவனுக்குக் கொடுப்பார்கள். இப்படிக் கடினமாகத் தான் வாழ்க்கை ஓடிக் கொண்டிருந்தது அவனுக்கு. பெற்றோர் படிக்கச் சொன்னபொழுது கேட்காமல் விளையாடிக் கொண்டே இருந்துவிட்டான். இப்பொழுது இந்த மாதிரி சிறு சிறு கூலி வேலைகள் செய்து வாழ்க்கை ஓட்டிக் கொண்டிருந்தான்.

பதுமனை நம்பி ஒரு மனைவி, ஒரு மகன். மகன் இளவரசு இரண்டாவது வகுப்பில் படித்துக் கொண்டிருந்தான். அன்று பதுமன் தண்ணீர் எடுக்கச் சென்ற பொழுது இளவரசுவும் பள்ளி விடுமுறை என்பதால் உடன் சென்றான். தந்தை நீர் நிறைப்பதைப் பார்த்துக் கொண்டிருந்த அவன், ஒரு ஆள் 'இந்தா, 11 ரூபாய்" என்று கொடுத்ததைக் கேட்டான். உடனே இளவரசு, "குடத்திற்கு இரண்டு ரூபாயாக ஏழு குடத்திற்கு மொத்தம் 14 ரூபாய், ஐயா" என்று சொன்னான். அந்த ஆளும் சினத்துடன் இன்னும் மூன்று ரூபாய் கொடுத்தான். இது போலவே அன்று பலரிடம் நிகழ்ந்ததால் திகைத்தான் பதுமன். தனக்கு எண்ணும் கணக்கும் தெரியாததால் மக்கள் தன்னை ஏமாற்றிக் கொண்டிருந்ததை உணர்ந்து வருந்தினான்.

மகனைக் கட்டிக் கொண்ட பதுமன், "எனக்கும் உனக்குத் தெரிந்த  எழுத்தையும் எண்ணையும் சொல்லிக் கொடுப்பா" என்று சொன்னான். இதற்குத் தான் "எண் எழுத்து இகழேல்" என்று அவ்வை ஆத்திசூடியில் சொன்னார் போலும்.

அதனால் குழந்தைகளே, எண்ணையும் எழுத்தையும் தேவையில்லை என்று இகழாமல் நன்றாகப் படியுங்கள், வாழ்வில் முன்னேறுங்கள்!


10 கருத்துகள்:

  1. நடையில் எளிமையாக இருந்தாலும் கருத்தில் வலிமையாக அமைக்க பெற்ற கதை. நல்லது கிரேஸ்

    பதிலளிநீக்கு

  2. "எண் எழுத்து இகழேல்"

    அருமையான வலைச்சர
    அறிமுகத்திற்கு வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  3. மிகவும் நன்றாக உள்ளதம்மா.. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நேரம் எடுத்துப் படித்துக் கருத்துரை இட்டதற்கு உளமார்ந்த நன்றியம்மா.

      நீக்கு
  4. தாமதமாகவே இந்த வகையைப் பார்க்கிறேன் பா.
    முதலில் “ஆத்திச்சூடி“ என்பதில் ச் கிடையாது. தளத்தின் லேபிளிலிருந்து ச் ஒற்றெழுத்தை முதலில் எடுத்துவிடு..பிறகு கொஞ்சம் கொஞ்சமாக நேரம் கிடைக்கும்போதெல்லாம் பார்த்துக் கருத்திடுகிறேன்..தொடர்ந்து எழுதுடா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எடுத்துவிட்டேன் அண்ணா..நன்றி.

      சரியண்ணா, மனம் நிறைந்த நன்றி

      நீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...