தாமரை இலை நீர்


வாழ்வைச்  சுமையாக்க அவ்வப்போது தலை தூக்கும்
துன்பங்களைக் கலங்காமல் தள்ளும் மனம் வேண்டும்;

பற்றிக் கொள்ள எளிதாக சுற்றி இருக்கும்
தீயவற்றை ஏற்காமல் தள்ளும் குணம் வேண்டும்;

சூழல் முழுதாக அமிழ்த்தினும் நிலை மாறாமல்
தீமைகளை உள்வாங்காமல் இருக்க வேண்டும்;

சுருக்கமாக துன்பங்கள் தீமைகள் எல்லாம்
தாமரை இலை நீராக  அகற்றும் மனம் வேண்டும்!

9 கருத்துகள்:

  1. அருமையாக முடித்துள்ளீர்கள் படத்திற்கேற்ப... நன்றி...

    பதிலளிநீக்கு
  2. தாமரை இலை நீர் .. அருமையான கவிதை !!!

    தாமிரை என்று எழுதியுள்ளீர்கள் .. தாமரை என்பது தானே சரி !!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி திரு.இக்பால்!

      தாமிரை சரி என்று நினைக்கிறேன், உறுதியாகத்தெரியவில்லை. தாமரை என்றே மாற்றிவிட்டேன்.

      நீக்கு

  3. சுருக்கமாக துன்பங்கள் தீமைகள் எல்லாம்
    தாமிரை இலை நீராக அகற்றும் மனம் வேண்டும்!

    வாழ்வின் அடிபட்டுத் தெரிந்து கொள்ள வேண்டிய
    மிக பெரிய விஷயத்தை மிக எளிதாக
    சுருக்கமாச் சொல்லிவிட்டீர்களே
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. நல்ல படைப்பு படைக்க உங்களைப் போல் எழுத்து திறன் வேண்டும் :-) இதையும் கூட சேத்துக்கலாம் :-)

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...