தலைவன் தலைவி பாகற்காய்

கரிய கூந்தலில் வெண் மலர் சூடி
கரங்களில் அணிந்து இருந்த தொடி
தாளம் எழுப்புமாறு தலைவி பாகற்காய்
நறுக்கிக் கொண்டு இருந்தாள் தலைவனுக்காய்

தலைவன் கசப்பான பாகற்காய் விரும்புகிறானே எப்படி 
மதி ஒத்த அவளின் மதியில் ஒரு எண்ணம் தோன்றியது
காந்தப் பண்பில் எதிர் எதிர் துருவங்கள் ஈர்க்குமே அப்படி 
கசப்பான பாகற்காய் இனிமையான தலைவனுக்குப் பிடிக்கிறது

சிரித்துக் கொண்ட அவள் மனதில் எழுந்தது ஒரு குரல்
தலைவனுக்குத் தலைவியைப்  பிடிக்குமே என்று
அவளின் மதி சொன்னது அனைத்துப் பொருட்களுக்கும் காந்தப் பண்பில்லை
அதனால் தன் இனிமையும் தலைவன் இனிமையும் சேர்ந்ததே என்று

இவ்வாறு எண்ணி உள்ளே சிரித்துக் கொண்டு
பக்குவமாய் உப்பும் காரமும் சேர்த்துக் கலந்து
பொன்னிறமாய் பொறித்து எடுத்த பாகற்காய்
இனிப்பது போலத் தோன்றுகிறதே எதற்காய்?

:-)

10 கருத்துகள்:

  1. அழகு....

    அன்பிருந்தால் அனைத்தும் இனிக்கும்...

    பதிலளிநீக்கு
  2. பக்குவமாய் உப்பும் காரமும் சேர்த்துக் கலந்து
    பொன்னிறமாய் பொறித்து எடுத்த பாகற்காய்
    இனிப்பது போலத் தோன்றுகிறதே எதற்காய்//

    பக்குவமாய் சமையலில் உப்பு மிள்கு சேர்ப்பதுபோல்
    அன்றாட வாழ்விலும் சேர்க்கவேண்டியதை
    பக்குவமாய்ச் சேர்த்தால் வாழ்வும் இனிக்கத்தானே செய்யும்
    மனம் தொட்ட பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. அருமை கிரேஸ்..கவிதையின் முடிவு அற்புதம்!!..

    பதிலளிநீக்கு
  4. நல்ல கற்பனை அழகு தமிழ்.
    வாழ்த்துக்கள்....!

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...