Monday, August 6, 2012

தேன் மட்டுமா தருகிறது தும்பி?


என் முற்றத்து மலர்த் தொட்டிகளின் அருகில் ரீங்காரமிடும் தும்பிகளே!
என் தோட்டத்துப்  பூக்களில் தேன் அருந்துவீர்கள் சரி
ஆனால் நீர் ஊற்ற வரும் என்னைச் சுற்றுவது ஏன்?
குனிந்த என் முகத்தின் முன் வந்து சிந்தை கவர்வது ஏன்?

நீர் அருந்தவா? நீர் ஊற்றும் எனக்கு நன்றி சொல்லவா?
அப்படி என்றால் அது உங்கள் இனிமையான குணத்தின் சான்றே
இயற்கையாக இறைவன் கொடுத்த நீரை ஊற்றுகிறேன் அவ்வளவே
ஆனால் நீங்கள் செய்வது அனைத்திற்கும் எவ்வாறு நன்றி உரைப்பது?

இனிமையான உணவாய் மருந்தாய் தேன் தருகிறீர்கள்
சுறுசுறுப்பாய் மகரந்த மாற்றம் நீங்கள் செய்யா விட்டால்
மலர் மலர்வது எங்ஙனம்? கனி கனிவது எங்ஙனம்?
இயற்கைச் சூழலின் சம நிலைக்கு இன்றியமையாத்  தும்பிகளே!

கம்பி இல்லாத்  தந்தி பயன்பாட்டின் கதிர் வீச்சுகளால்
மனித வாழ்வுமுறை  மாற்றங்களால் அழிவைச் சந்திக்கும் தும்பிகளே!
உங்களைக் காக்க சிந்தனை செய்து சிறிது செயலாற்றினால் 
நன்றி உள்ளவர் ஆவோம், இயற்கையும் மகிழ்ந்து செழிக்கும்!  

5 comments:

 1. நல்ல கவிதை..ஆழமான கருத்து Grace..and it made me remember an animation 'Bee movie' :-)

  ReplyDelete
 2. தாங்கள் சொல்லவந்த விடயம், அதற்காகப் போட்ட படம் ,சொற்கள் என்பன என்னைக் குளப்பிவிட்டது.
  இங்கே தேன், மகரந்தம், தேனீக்கள் பற்றிக் கூறி, குளவிப் படமிட்டு, தும்பி பற்றிக் கூறுகிறீர்கள்.
  முதல் தும்பி என்பது DRAGONFLY என ஆங்கிலத்தில் அழைக்கப்படுவது, கூகிளில் படம் பார்க்கவும். கொசுவை உண்ணும் தும்பிவகை எனதான் மொழிபெயர்க்கிறது. இத் தும்பி ஒரு ஊணுண்ணி சிறு பூச்சிகளை உண்பது, இதன் உணவு தேனில்லை. அதனால் மகரந்தச் சேர்க்கைக்கு இது உதவாது.இது பூக்கள் அருகே பறப்பதே!, பூவை நாடிவரும் பூச்சிகளை உண்ணவே!
  இதில் நீங்கள் இட்டபடம் குளவி, இவையும் பூச்சி, புழுக்களை உண்பவை, அத்துடன் தேனீக்களின் பயங்கர எதிரிகள். இவை கூடப் பூவை நாடுவதே, மலரை தேனுக்காக நாடும் பூச்சிகளைப் பிடிக்கவே!
  அதனால் ஒரு தேனீப் படம் போடவும். மிகப் பொருத்தமாக இருக்கும்.

  "கொங்குதேர் வாழ்க்கை, அஞ்சிறைத் தும்பி" - எனும் சங்கப் பாடல் தும்பி என்பது தேன் குடிக்கும் பூச்சி என்பதாகத்தான் கவிதை புனையப்பட்டுள்ளது. தேனீ ,தும்பி வகையா? என்பது உயிரியலாளர்கள் எடுக்க வேண்டிய முடிவு.
  ஒரு சங்கப்புலவர் - தாய் முதலை , முட்டையிலிருந்து வெளிவந்த தன் குஞ்சுகளை பாதுகாப்பாக நீர்நிலைக்குக் கொண்டு சென்று விட வாயில் கவ்வுவதை மட்டும் பார்த்து விட்டு, தன் குஞ்சைத் தின்னும்
  தாய் முதலை போல் எனப் பாட்டெழுதி விட்டார் என்பதை, சமீபத்தில் எழுத்தாளர் முத்துலிங்கத்தின் பதிவில் பார்த்தேன்.//ஐங்குறுநூறில் ஓரம்போகியாருடைய பாடல் ஒன்று வருகிறது. ‘தன் பார்ப்புத் தின்னும் அன்பில் முதலையோடு’ என்று. தன் பிள்ளைகளை தானே தின்னும் முதலையின் நாட்டைச் சேர்ந்தவன் என்பதாக பொருள் தரும் பாடல். முதலை அதனுடைய பிள்ளையை தின்னுமா என்பதுதான் கேள்வி//http://amuttu.net/viewArticle/getArticle/282

  அப்படியும் இது தவறாக இருக்கலாம்.
  சாதாரணமாக தும்பி, தேனீ, குளவி என்பன ஒவ்வொன்றும் தனிப்பட்ட உருவ அமைப்பும், குணாதிசயமும் கொண்டவை!

  ReplyDelete
  Replies
  1. தங்கள் கருத்துக்கு நன்றி! தும்பி என்னும் சொல் தேனீ, குளவி இனவண்டுகளைக் குறிக்கும். குறுந்தொகையில் தட்டானை குறிப்பதாகவும் உள்ளது. நான் போட்டிருக்கும் படத்தில் இருப்பது தேனீ அல்ல, குளவி தான். பயிர் அழிக்கும் பூச்சிகளை குளவி அழிக்கும். தேனியைப்போலக் குளவியும் இயற்கைச்சூழல் சமன் படுத்துகிறது. தேனீ மற்றும் குளவி வெவ்வேறு குணம் கொண்டவை தான். நான் சொல்லியிருக்கும் கருத்து என்ன என்றால் இயற்கைச் சூழல் சமன்பாட்டிக்ற்கு தேனீ, குளவி - இந்த வண்டுகள் அனைத்தையும் அழிய விடாமல் காத்தல் வேண்டும் என்பதே. நான் இங்கே போட்டிருக்கும் படம் என் கவிதையின் முழு சாரத்தையும் காட்டுவது அல்ல. தேனீ படமும் சேர்க்கலாம்.

   Delete
  2. எனக்கும் அதே சந்தேகம்தான். இப்போது தீர்ந்துவிட்டது. அருமையான கவிதை. பகிர்வுக்கு நன்றி.

   Delete
  3. உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ரேகன்.

   Delete

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...