இன் உயிர் தமிழ் அன்றோ

வாழும் இடம் சார்ந்து அண்டையருடன் உரையாடும் மொழி  தமிழன்றி வேறாய் இருக்கலாம்
சுற்றுப்புறத்தில் செவி விழும் மொழி பற்பல வகையினதாய் இருக்கலாம்
ஆயினும் இன் உயிர் தமிழினும் இனியது உண்டோ

பணி சார்ந்து எழுதும் மொழி தமிழன்றி வேறாய் இருக்கலாம்
வாசிக்கும் ஏடும் படிக்கும் புத்தகமும் பற்பல மொழியினதாய் இருக்கலாம்
ஆயினும் இன் உயிர் தமிழினும் இனியது உண்டோ

பல மொழி கேட்டாலும் அயல் மொழி பயன்படுத்தினாலும்
தேன் உயிராய் குருதியோடு கலந்தது தமிழன்றோ
வாய் மொழி மாறினாலும் உயிர் மொழி மாறுமோ

இடையில் துவங்கி இடையில் போகும்  மொழி பல உண்டு
ஆனால் தொன்று தொட்டு முதிரா இளமையோடு
செம்மொழியாய் இனிப்பினும் இனிப்பது எம் தமிழ் அன்றோ!

13 கருத்துகள்:

  1. இடையில் துவங்கி இடையில் போகும் மொழி பல உண்டு
    ஆனால் தொன்று தொட்டு முதிரா இளமையோடு
    செம்மொழியாய் இனிப்பினும் இனிப்பது எம் தமிழ் அன்றோ!//

    அருமையான ஆழமான கருத்து
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. அருமை கிரேஸ்..நீங்க கூறி இருப்பது முற்றிலும் உண்மை..

    //தேன் உயிராய் குருதியோடு கலந்தது தமிழன்றோ
    வாய் மொழி மாறினாலும் உயிர் மொழி மாறுமோ//- அற்புதமான வரிகள் :-)

    பதிலளிநீக்கு
  3. அன்பின் கிரேஸ்

    அருமையான கவிதை - இனிப்பினும் இனிக்கும் நம் தமிழ் மொழியினைப் பற்றிய கவிதை நன்று. செம்மொழி- தமிழ் மொழியினை விடச் சிறந்த மொழி கிடையாது - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் அன்பின் சீனா ஐயா! கருத்துரைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

      நீக்கு
  4. அருமை.... தங்களின் தமிழ் தொண்டு மென்மேலும் செழிக்கட்டும்.......

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...