வைகறைக் கடல்

யான் துயில் நீங்கிய ஓர் குளிர்ந்த வைகறைப் பொழுதில்
நடை பயில ஆர்வம் கொண்டு புணரியை நோக்கிச் சென்றேன்
நீலக் கடலின் திரை ஓசை செவியில் விழும் பொழுதில்
என் உண் கண் வியப்பில் விரிந்து  மின்னியது

யான் கண்ட காட்சியின் அழகை முழுதாக உள்வாங்கும் ஆசையில்
குளிர்ந்த மணலில் பாதங்கள் பதிய மெய் மறந்து நின்றேன்
மலையிலிருந்து கொண்டு வந்த செங்காந்தள் மலர்களைத் தூவிக் கொண்டு
தொலைவில் எழுந்த கதிரவன் சிவந்த மாணிக்கமாய் ஒளி வீசியது

பரந்து விரிந்து பொன்னைப் போல் தகதகத்த ஆழியில்
இளம் சிவப்பாய் நாணத்தின் வரிகள் படர்ந்ததை ரசித்தேன்
கடல் காக்கைகள் மகிழ்ச்சியில் இசைத்து பாடிய பாடல்
காற்றில் கலந்து செவியில் புக இனிதே பொழுது புணர்ந்தது

புணரி, ஆழி  - கடல் 
திரை - அலை 
உண் கண் - மையுண்ட கண் 

2 கருத்துகள்:

  1. காலை பொழுதின் அழகை அழகாக உணர்த்துகிறது உங்கள் கவிதை :-). புணரி, திரை போன்ற புதுச்சொற்களையும் கற்றுக் கொண்டேன். நன்றி !!

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...