தாய்

மயில் இறகும் இலவம் பஞ்சும் மென்மை என்று நினைத்திருந்தேன் 
உன் பட்டுக் கன்னம் தொடும் வரை

விண் மீன்களின் கண் சிமிட்டலும்  நிலவின் ஒளியும் பிரகாசம் என்று நினைத்திருந்தேன்
உன் கண் ஒளிர்வதைக் காணும் வரை

வைகறை ஒளியும் மலரும் அரும்பும் அழகு என்று நினைத்திருந்தேன்
உன் புன்னகை பார்க்கும் வரை 

மல்லிகையும் பிச்சியும் நல்ல மணம் என்று நினைத்திருந்தேன் 
உன் தலை உச்சி நுகரும் வரை 

அக்கறை கவனம் அன்பு மிகுந்த பராமரிப்பு நான் பெறுவதற்கே என்று நினைத்திருந்தேன் 
உன்னைக் கருவில் தரிக்கும் வரை

படிப்பும் பட்டமும் பதவியும் பெருமிதம் என்று நினைத்திருந்தேன்
உன்னைக் கரங்களில் ஏந்தும் வரை 

வாழ்வில் ஏது ஏதோ பூரிப்பு என்று நினைத்திருந்தேன்
உன் தாய் என்று ஆகும் வரை! 

3 கருத்துகள்:

  1. அருமை அருமை
    சீரான சிந்தனையுடன் கூடிய படைப்பு
    மனம் கவர்கிறது
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. தாய்மையின் பெருமையை அழகாக விளக்கும் உங்கள் கவிதை அருமை :-)

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...