படைத்தவன் ஒன்றாகத்தான் படைத்தான்

படைத்தவன் மனிதரை  ஒரே சாயலாகத் தான் படைத்தான் 
பல தேவைகளுக்கு ஏற்ப பல பல தொழில் வைத்தான்
பகலவன் ஒளிவீசும் காலத்தை வைத்து பல நிறம் கொடுத்தான்
பல விதம் வாழ்வின் நன்மைக்கே படைத்தான் 
பகுத்தறிய மற்ற உயிர்களுக்கு மேலாய் ஆறு அறிவும் கொடுத்தான் 
பண்பட்டுப் பயன் அடையாமல் ஆறறிவு மனிதன் பிரிவினை வைத்தான்
படைத்தவன் என்ன செய்வான்? பாவம், ஒன்றாகத்தானே படைத்தான்! 

10 கருத்துகள்:

  1. படைத்தவன் என ஒருவனும் இல்லை
    இருந்தால் அவன் புத்தி சாலி இல்லை
    அழகில்லாமல் பலரைப் படைத்தான்
    பணமில்லாதாராகப் பலரைப் படைத்தான்
    குணமில்லாதோர் பலரைப் படைத்தான்
    மானைப் படைத்து, அதை அடித்து உண்ண ஒரு
    புலியைப் படைத்தான்.
    கடவுள் கையாலாகதவர்களின் கையாயுதம்
    முடியாதவர்களின் முனகல்
    ஏமாளிகளின் எதிர்காலம்
    பிழைக்கத்தெர்ந்தவர்களின் முதலீடு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்தை பதிவு செய்ததற்கு நன்றி.
      அழகு, பணம் எல்லாம் நாம் வகுத்த மதிப்பீடுகள். குணமில்லாதோர் நான் சொல்லியிருக்கும் பகுத்தறிய தெரியாத மக்களில் சேர்வர். படைத்தவன் காரியங்கள் மனித அறிவுக்கு எட்டாது என்பது என் கருத்து.

      நீக்கு
  2. படைத்தவன் என்ன செய்வான்? பாவம், ஒன்றாகத்தானே படைத்தான்! //

    அருமை அருமை
    எல்லா கெடுதல்களையும் நாமே செய்து கொண்டு
    அவனை வம்புக்கிழுத்தால் எப்படி
    மனம் கவர்ந்த அருமையான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி திரு.ரமணி! தொடர்ந்து என் இடுகைகளைப் படித்து உங்கள் கருத்தை பதிவு செய்வதற்கும் பல நன்றிகள்!

      நீக்கு
  3. நல்ல கருத்து கிரேஸ்!!..ஆறறிவு மனிதன் தன்னை மட்டும் இல்லாமல், தன்னை சுற்றி இருக்கும் இயற்க்கை வளங்களையும் அழித்துக் கொண்டு இருக்கிறான்..


    பதிலளிநீக்கு
  4. உண்மைதான்..

    நாயாக, நரியாக, சிங்கமாக, புலியாக எல்லாமுமாக இருக்கும் மனிதனால் முடியாதது ஒன்றே ஒன்றுதான்..

    மனிதனால் மனிதனாக மட்டும் இருக்கவே முடியாது.

    பதிலளிநீக்கு
  5. படைத்தவன் குறைவில்லாமல் தான் படைத்தான் , மனித மனங்களில்தான் வேறுபாடு

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...